மக்களைப் பாடிய மகாகவி பாரதி
அடிமை மக்கள் நிலை கண்டு துயர்கொண்டு
பாக்களால் மக்களை வெகுண்டு எழுச்செய்த
தேசிய கவி வீரகவி அமரகவி அவரே மகாகவி
மாக்களைச் சொட்டும்பாக்களைப் பாடிய
பாரதியைப் பாவை நான் பாடவந்தேன்
நெஞ்சுப் பொறுக்கு தில்லையென்ற பாட்டினிலே
அவன் நெஞ்சக்கு மறலைக்காட்டிவிட்டான்
அச்சப் பேயதனை ஓட்டிட வே நமக்கு
அச்சமில்லை என்றே பாடிவைத்தான்
பெருமைதனை இழந்து நின்ற பெண் குலத்தின்
அருமைதனை அழகாக உணர வைத்தான்
பெண்ணுக்குக் கற்பென்றும் உயிரென்றான்
ஆணுக்கு ஏனது பொருந்தா தென்றான்
பெண்ணைச் சமமென்றான் ஆணுக்கு
பெண்ணும் விரைகின்றாள் விண்ணுக்கு
தாயின் கை பிணைத்த விலங்குதனைப்
பாவின் துணைகொண்டுத் தெறிக்க வைத்தான்
ஆம், பாரதத்தாயின் கை பிணைத்த விலங்குதனை
தமிழ்ப்பா கொண்டு த்தெறிக்க வைத்தான்
ஒருமைப்பாடென்று பேசிகின்றார்
ஒருமைப்பாடு அவன் தன் மூச்சன்றோ
தெளிவில்லா அறிவற்ற மக்களைத் தம்
தெம்பானப் பாட்டாலே தெளியச் செய்தான்
தனக்கென்று வல்லமை கேட்கவில்லை
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
மட்டில்லா கவலையும் கொண்டிட்டான்
காக்கை குருவியெங்கள் ஜாதியென்றான்
ஆகா! அவனுள்ளத்தின் விரிவு தான் என்னே!
தோட்டத் தொழிலாளித்தான் பட்டத் துன்பத்தை
பாட்டில் வடித்திட்டான் படித்தவர் மனமுருக
அட்டை கடித்தப் புண்ணில் ஈ வந்து மொய்த்ததுவும்
பட்டினியாலவர் வயிறு மிக ஒட்டிப்போனதுவும்
எத்தனையோ இன்னல்களை அவனேற்றுவாழ்ந்ததுவும்
அத்தனையும் எழுதிவைத்தான் தன்பாட்டுத் திறத்தாலே
அன்றைய நாள் புலவரெல்லாம் பாடினார் முடிமன்னனையே
பின் வந்த ஒளவையோ வரப்புயர என்று சொல்லி
ஏர் பிடித்த மக்களுக்கு ஏற்றம் தந்தாள்
இன்றைய நம் பாரதியோ குடிமகனை
இந்நாட்டு மன்னனென மகுடம் வைத்தான்
மனமாற அன்று அவனும் நினைத்தானம் மா
மக்களின் மன்மாற அவன் சொல்லும் பலித்ததம்மா
பாட்டெல்லாம் ஏட்டிலே தீட்டிவிட்டோம்
இதயக்கூட்டிலே அடைத்ததனைப் பூட்டினோமோ?
நல்லதொரு நாதம் தரும் வீனணயதை
நலங்கெட புழுதியில் எறிந்திடாதீர்
அவணிக்கு அவன் பாட்டு கரும்பு வெல்லம்
அவனை யென்றும் அழிக்காது காலவெள்ளம்.
அருமை