ஒரு பூவைப் பாட வாய்ப்பளித்தமைக்கு இந்த பூவையின் பூரணப் பூசிதம்.
பூவென்ற சொல்லுக்குப் பொருளே தாமரை
என்பாட்டுக்கு நாயகியாய் அம்மலரை ஏற்றிக் கூறுவதில் இல்லை பிழை
சங்குடையோன் தாழ்களுக்கு செங்கமலமென உவமையானாய் சஞ்சலையின் சகளத்தை சாந்தமொடு சுமக்கின்றாய் சதளமே நீ சனங்களுக்கும் உவமையானாய், எப்படி? மாலையில் கண்மூடி சோலையில் மயலும்போது கூம்பிய உன்னிதழுக்குள் இருள் சூழ்ந்து சாய்ந்திடுவாய் காலையில் கதிரவன் கதிர்பட்டு காரிருளை விரட்டியப் பின் முகமலர்ந்து சிரித்திடுவாய் மனமே, அறியாமை இருள்ளுன்னை ஆட்க்கொண்டு ஆளுகையில் ஆத்மாவை அருமையாக்கும் ஆண்மீகத்தை நம்பி விடு புரியாதப் பேயை அரண்டோடச்செய்துவிட்டு ஆதித்தன் போலெங்கும் ஆதிக்கம் செய்யவைக்கும் பாடினேன் ஒரு பூவை நீக்கவே உள்ளச்சோர்வை தவறிருந்தால் இந்த அவை பொறுக்க வேண்டும் இப்பூவையை.