வானமாக நீயிருக்க
மேகமாக நானிருக்க
மேகபெய் நதியாக நீயிருக்க
நதியின் கரையாக நானிருக்க
கரையின் மணலாக நீயிருக்க
மண்ணில் மரமாக நானிருக்க
மரத்தில் மலராக நீயிருக்க
மலரின் நடு தண்டாக நானிருக்க
தண்டில் மதுவாக நீயிருக்க
மதுவை வண்டாக நான் குடிக்க
உன்னை நானாக நாளினைக்க
என்னை நீயாக நீ நினைக்க
இருந்த நிலையை நினைக்க நினைக்க இன்னும் இனிக்குது
என்ன செய்ய