எப்பொருளை எடுத்தாலும் மங்கை
எனக்கென்று பறிப்பாளாம்
தங்கை
ஒரு தங்கை உனக்கென்று தந்தை
கொடுத்திட சொல்வாராம் பங்கை
அடிபட்டு அழுதாளோ மங்கை
ஆறுதல் சொல்வாளாம் தங்கை
நோயென்று படுத்தாளோ மங்கை நோகாமல் பார்ப்பாளாம் தங்கை
வேலையென்று வந்தாளோ தங்கை
வேங்கைபோல் போடுவாள் சண்டை
எத்தனை சண்டை வந்தாலும்
என்றும் அன்பு குறையாது
ஒற்றுமையே உயர்ந்த நிலையாகும்.
ஒழுக்கமுடன் வாழ வழியாகும்.
சோதரிகள் எல்லாம் அன்போடு
பண்போடு வாழனும் பல்லாண்டு