மழையே மழையே வருவாயோ
மகிழ்ச்சி எல்லாம் தருவாயோ
மறைந்த மாயம் என்னவோ
மங்கை எனக்குச் சொல்வாயோ
பாவிகள் பலருண்டு உண்மை
அப்பாவிகளை மன்னிப்பது மேன்மை
நல்லவர் ஒருவரல்ல பலருண்டு
அவர் பொருட்டு நீ வந்தால் மிக நன்று
ஏங்கும் எம்மைபாராயோ
ஏக்கம் எல்லாம் தீராயோ
எங்கும் ஒரே வரட்சி
இதிலுக்கென்ன பெரும் மகிழ்ச்சி
குடிக்க தண்ணீர் இங்கில்லை
குளக்கரை எங்கும் நீயில்லை
மழையில்லாமல் எதுவும் இல்லை
மண்ணுக்கு நீயும் வாராயோ
உன்னால் பிறந்த பயிரெல்லாம்
உனக்காகக் காத்துக் கிடக்கின்றன
வானில் தத்தளிக்கும் மழையே
பூமித்தாயின் மடியில் தவிழ வா
இடியும் மின்னலும் முன்வர
மழையே நீயும் பின்வர
மக்கள் மனமும் மகிழ்ந்திட
எத்தனை நாளாகுமிங்கு நீ வந்திட
இத்தனை கெஞ்சிக் கேட்டப்பின் இன்னும் கல்லாய் இருப்பாயோ
மாட்டாய் என்றே உனை நம்பி
மழையே உன்னை எதிர்பார்ப்பேன்.