அழகுண்டு தோழி
அழியும் அணியைத்தான் அவளும் கேட்டலைவாள்
பொறுமையுண்டு தோழி
பொன் வேண்டும் எனக்கென்று
போலியாய்ச் சிரித்திடுவாள்
நிதானமுண்டு தோழி
நிலம் தான் வேண்டுமென்று நிலையாய் நின்றிடுவாள்
தன்மானமுண்டு தோழி
சன்மானம் வேண்டுமென்று
சாதனைச் செய்திடுவாள்.
அன்பளிப்பு கேட்கும் மாமியாரே
உன்னருமை மகளை மறந்தனையோ
மருமகனும் கேட்பான் உன்னை ஒரு நாள்
வாழவைப்பாய் என்னை இந்நாள்.