Monday, December 23, 2024
Homeகவிதைஇயற்கை சக்தியெல்லாம் அவளே!

இயற்கை சக்தியெல்லாம் அவளே!

எங்கும் எதிலும் எப்போதும்
அரசியலைக் கேட்டுக் கேட்டுப்
புளித்து விட்ட இந் நாளில்
அன்னையின் பெருமை தனைப் போற்றிடவே இக்கவிதை ஆம்
இயற்கை அன்னையின் பெருமைதனைப் போற்றிட வேக் இக்கவிதை

அனல்புனலாய் விண்மண்ணாய் வெளியாகி
விரிந்தவளே
உனதருளால் உயிர்வகைகள் செழித்தோங்கச் செய்தவளே
தினையளவு நீ சினந்தால் மண்ணகத்தார் வாழ்வு என்னாம்
மனையிழந்து தனமிழந்து தத்தளிக்கப் பார்த்தோமே !


தண்மதியும் பகலவனும் தம்முனற தவறாது
விண்வெளியில் பவனி வரும் எள்ளளவும் பிசகாது
பண்ணுக்கு உயிரளிக்கும் தாளம்போல் இம்மண்ணுக்கு நீயமைந்தாய் இயற்கைத் தாயே


விஞ்ஞானி உன்னருளால் உன்சக்தித் தனைக் கண்டார்
அஞ்ஞானம் தனைய கற்றி அதிசயங்கள் புரிந்திட்டார்
எஞ்ஞான்றும் இப்புவியில் இன்புற்று மகிழ்ந்திடவே
செஞ்ஞாயிறு போன்று இருளகற்றும் இயற்கைத்தாயே


எத்தனைதான் நுண் கருவி பாரினிலே வந்தாலும்
அத்தனையும் மானிடர்கள் பரிச்சயமும் செய்தாலும்
இப்புவியில் ஈராண்டு இயற்கைத்தாய் சதி செய்தாள்
அப்போது இயந்திரங்கள் இருந்தென்ன செய்தனவோ?


ஆயிரம்தான் கம்ப்யூட்டர் கால்குலேட்டர் வந்தாலும்
மரணத்தை மாற்றிட மானிடரால் இயன்றிடுமோ?
அதனால்தான் கூறுகின்றேன் அன்னையே உன் பெருமை
எதனாலும் அளப்பரிது எல்லையில்லா வண்மையளே


பட்டனைத் தட்டிவிட்டால் பாழாகும் இவ்வுலகம்
பட்டென்று அதன் சுழற்சி அனுப்போது நின்றுவிட்டால்
எட்டயெட்டப் பறக்கும் எல்லாப் பொருள்களுமே
அதனால்,
திட்டவட்டமாகச் சொல்வேன் இயற்கைத் தாயே யுன்
இட்டத்திற்குக் கட்டுப்பட்ட தண்டமெல்லாம்


இயற்கையில் எல்லாம் சிறப்பவள் அவளே
செயற்கையில் மறைந்து நிறைபவள் அவளே
முயற்சியில் முனைபவர் தமக்கருள்பவளே
அயற்சியிலாதவர் எவர்க்கும் அருள்பவளே


மலரில் மணமானாய் மணியில் ஒளியானாய்
கடலுக்கு கரையானாய் உடலுக்கு உயிரானாய்
உணவுக்குச் சுவையாகி
கண்ணுக்குத் தெரியாமல்
எங்கிருந்து காக்கின்றாய் இயற்கைத்தாயே


வித்திலிருந்து மரமென் பார்சிலர் இல்லை
மரத்திலிருந்து வித்தென்பார் சிலர் இதில்
முந்தியது எதுவென்ற கேள்விக்குப் பதிலில்லை
வித்துக்குவித்தாகி வித்தின்றி விளங்குபவள்
எத்திக்கும் பரந்து நின்று எல்லாமாய் ஆகின்றாய்
முக்திக்கும் வித்தானாய்த் 
தித்திக்கும் செங்கரும்பே!


அண்டமெல்லாம் ஆளுகின்ற அன்னை பராசத்தி
பிண்டங்கள் பிறங்குகின்ற பேரின்பச் சக்தி
அகிலமெல்லாம் போற்றுகின்ற தேவி மகாசக்தி
அவளே யென்றும் இயற்கையின் உள் நின்ற சக்தி...
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments