தேடி வந்தவரனையெல்லாம் தாண்டு
முன்ஜென்ம பந்தத்தால் என்னுள்ளம்
முன் பின் அறியா அவனொருவனையே நாடி
இறைவனருளால் பெரியோர் ஒன்றுகூடி
வாழ்த்துக்கள் கூறி மங்களம் பாடி வாழ்க்கையில் இணைத்தார் எங்களை ஜோடி
கணவனை தெய்வமெனத் தொழுஎன்பார்
தாலிகட்டியவனை ஒரு படி மேல் என்பேன்
தாய் தந்தை தம்பி தங்கை சொந்தம் பந்தம் அனைத்தையும் விட்டு ஒரே நாளில் உலகமே நீயென்று துணைவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்தேன்
புகுந்த நெஞ்சில் ஆயிரம் கண்டேன்
புதிய வாழ்வின் உண்மை உணர்ந்தேன்
வெள்ளை உள்ளத்தில் சிறுபிள்ளையின் குணம்
வஞ்சமில்ல நெஞ்சம் கள்ளமில்லா சிரிப்பு
உதட்டளவில் பேச தெரியாது உள்மனதை அறிய முடியாது
அன்புக்கு என்றும் பஞ்சமில்லை கோபம் வந்தால் அது தஞ்சமில்லை
உண்மை உரைக்க அஞ்சுவதில்லை என் தேவையை மறைக்க அவர் கஞ்சனில்லை
மனம் போல் வாழ்வளித்த இறைவா நான் வேண்டும் மற்றுமொரு வரம்தா
எத்தனைப் பிறவிகள் நான் எடுத்தாலும் அத்தனையிலும் நாங்கள் இணைந்தே வாழ பொட்டோடும் பூவோடும் உனை சந்திக்கும் நாளன்று
கோடி முறைகேட்பேன் இவ்வரம் தாவென்று.