ஆறிரண்டு ஓராண்டில் தளமிட்டு தெரிவை வரையங்குலமங்கலமாய் ஆராய்ந்து ஆசையோடு அறிவையும் சேர்த்துக்கட்டிய இதயமாளிகை அன்பும் பாசமும் கலவையாக்கி கனவும் கற்பனையும் துணை நிற்க நானே என் மனதால் கட்டிய மறையாத மனக்கோட்டை என் வீடு மானக்கதவை திறக்க முயன்றால் அரும்பாடு பூட்டென்று தொங்குவதோ பூவையின் கட்டுப்பாடு வீட்டைச் சுற்றியதோர் பண்பு வேலி ஆனால் வீடோ இன்றுவரை காலி. பணத்தோடும் பொருளோடும் சிலர் வந்தார் வீடென்று கொடுக்க மறுத்தேன் இது வாடகை வீடன்று சொந்த வீடாக்க சொந்தம் கொண்டாடியவர் பலருண்டு பாவம் அவறிவாரோ இது என் தனி உரிமையென்று என் இதயக் கதவும் ஒருநாள் திறக்கும் என் வீட்டில் புது உறவும் பிறக்கும் அது என்று எப்படி எப்போது ஆசைப் பறவை சிறகைவிரிக்கும் பொய்யாம் காதலில் மூழ்கி ஏமாறாமல் மெய்யன்போடு என மணக்கும் என் கணவன் தூய்மை உள்ளத்தில் நானே குடியிருக்க என் குடியிருப்பை உனக்காகத் திறப்பேன் அது வரை உயிரினும் மேலாய் எனை நினைக்கும் உனக்கே உரித்தான என் இதய வாசல் அந்த இனிய நாளும் வரும் வரையில் இரும்பாய் என்றும் மூடியே கிடக்கும்.