அன்பின் முதிர்ந்த எல்லைக் காதல்
பண்பில் உயர்ந்து நிற்கும்
காதல் காரணம் அறியது
இன்னும்
காதல் கைமாறு கருதாது
ஆதலால் ஏமாற்றம் அங்கில்லை பின்னை சாதலாம் எற்றுக்கோ தெரியவில்லை
காதலின்றேல் சாதலென்ப கறிக்குதவா கத்தரித்காய்
பேதையர்கள் காதலையும் காமத்தையும் பகுத்தறியார்
காதலின்றேல் சாதலென்றால் இன்றிந்த பூதலத்தில்
மக்களினம் பூண்டோடு காணமல் மறைந்திருக்கும்
கட்டியவன்வெட்டுபட்டுவிட்டது கேட்டுத்தாலிகட்டியவள் கண்ணகி தான் செத்தாளா? இன்னும்மட்டில்ல காதல் கொண்ட மாதவிதான் மாண்டாளா?
பட்டிமன்றத்திற்கேற்ற பொருளாகும் அவ்வளவே
வெட்டியிந்த வாதமெல்லாம் வாழ்க்கை வாழ்வதற்கே.