வாரிக் குளத்தெழுந்து காலைக் கதிரவன் தன்
ஜாலம் தனைக் காண வாரீர்
காரிருளாம்
போர்வைக் கிழித்தெறிந்து
ஞாலம் விளங்கிடவே
கதிர்வேலை விடும் வித்தை காணீர்
நாகநிற மொத்த நாகமெனத் திகழும்
மேகக் குலத்திடையே, ஆஹா! சீர்கோலமாக வழகின்ற தாகப் பொலிகின்ற
பாகுப்பொன் தாரை தானோ?
ஈடு எதைச்சொல் வேனோ?
தன்னன் உலையில் வெந்த
கிண்ணம் கவிழ்ந்திருக்கும்
வண்ணம் தெரியுதந்த காட்சி
கண்கவரும் மாட்சி
தென்னந் சோலையில் வண்ணப்பறவைகளும்
வாழ்த்துப் பாடுது காண் அங்கே
பண்ணில் கலரும் மனதிங்கே
காழி மண் சுமந்தான் நெற்றிக்கண் சுமந்தான்
ஊழிமுதல்வனவன் மதுரை மண்சுமந்தான்
அக்கோலால் புண் சுமந்தான்
இவன் பாதமலர்க் காண
ஆழி இடங்கொண்டான் ஆழி படையுடையான்
பாழில் கீழ் அகழ்ந்தான் வாழி! தம் பெருமான்
ஊழி நெருப்பென வேஓங்கி அழலுருவாய்
ஏழ் உலகுக்கப்பாலாய்
பாழ்வெளியில் பரந்திட்டான்
மண்ணோர் நாம் காண
விண்ணிலிருந்து
பந்தின் உருக்கொண்டு சிந்தும் அருள் கொள்வீர்
ஏழை இவனென்றும் தோழை அவனைன்றும்
பேதம் அவனெண்ணான்
நீதி நேர்க் கொண்டான்
மோழை மனங்கொண்டீர் பாழாம் பேதத்தை ஆழத் குழித்தோண்டி அதிலே புதைத்திடுவீர்.
ஆனென்றும் பெண்னென்றும் பிரித்தவன் பார்த்ததுண்டோ?
ஆணுக்குப் பெண் சமமென்றார் அறிஞ்ஞ ரெல்லாம் அதனாலே
ஆண் பெண்ணென்ற கண்ணிரண்டும் ஒன்றாய்க்காண வேண்டும்
வாழ்வை ஆணின்றிப் பெண்ணில்லை பெண்ணின்றி ஆணில்லை
என்றறிந்து சேர்ந்து வாழ்வீர்.
நாளும் தவறாமல் வந்து வந்து மறைகின்றான்
சிந்தனை உமக்குண்டோ? சிந்தித்துப் பார்த்ததுண்டோ?
நாளும் நமக்குற்ற
வேலை முறையாக
நாம் முடிக்க வேண்டுமென்றே
தான் வந்து காட்டுகின்றான்.