சீரிய நெற்றி எங்கே?
சிவந்த நல் இதழ்கள் எங்கே?
கூரிய விழிகள் எங்கே?
குறுநகை போனதெங்கே?
நேரிய பார்வை எங்கே?
நிமிர்ந்த நன்னடை தான் எங்கே
நிலமெல்லாம் வணங்கும் தோற்றம்
நெருப்பில் வீழ்ந்த திங்கே
சாவே உனக்கொருநாள்
சாவு வந்து சேராதோ!
சஞ்சலமே நீயுமொரு
சஞ்சலத்தைக் காணாயோ
தீயே உனக்கொருநாள்
தீ மூட்டிப்பாரோமோ
தெய்வமே உன்னையும் நாம்
தேம்பியழவைப்போமோ!
கவியரசு கண்ணதாசன்.