வானில் தெரியும் நட்சத்திரம் என் மனந்தனில் அவளின் பொன் சித்திரம்
ஆடிப்பாடி மகிழ்ந் தோமே
அரும்பே யென்னை மறக்காதே
சொர்க்கம் எங்கென்று தேடினோமே
நம் சொந்தம் தன்னை நினைவில்கொள்
கஷ்டத்தில் நானுந்தன் துணையடி
நீயிஷ்டம் போல் துணையைத் தேடாதே
ஆசிரியர் நமக்குத் தெய்வம்டி
அணங்கே நீயெனக்கு உயிரடி
பள்ளி நம்மைப் பிரித்தாலும்
பாழும் உள்ள முனை தேடிடுமே
ஈராண்டு நாம் மகிழ்ந்தோமே
இது பிரிவதற்கு தான் என மறந்தோமே
அன்புயென்னும் தண்ணொளியை
பிரிவு யெனும் முகில் மறைத்திடுமோ
இன்பம் எத்தனை வந்தாலும்
இனியவள் என்னை மறக்காதே
உலகில் நாமும் உள்ளவரை
உள்ளத்தில் என்னை நிறுத்திக்கொள்
நீ தான் என்னை மறந்தாலும்
நிலாவென ஒளிருவாய் யென் மனதில்
(என் உயிர் தோழிக்காக நான் எழுதிய முதல் கவிதை)
உங்கள் உலகத்தில் தொடர்ந்து உலா வரவத்தமைக்கு நன்றி!